×

கொச்சி ஏர்போர்ட்டில் 6.2 கிலோ தங்கம் பறிமுதல்: 5 பைக் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு விமானங்களில் வந்த 7 பயணிகளிடம் இருந்து 6.2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சுங்க இலாகாவினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் பல நூதன முறைகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கொச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சார்ஜா, துபாய், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 4 விமானங்களில் இந்த சோதனை நடந்தது. சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த ரதீஷிடம் இருந்து 1.1 கிலோவும், துபாயில் இருந்து பிளை துபாய் விமானத்தில் வந்த அஷ்ரபிடம் இருந்து 579 கிராமும், துபாயிலிருந்து ஒரு தனியார் விமானத்தில் வந்த அன்சில், அசாருதீன் ஆகியோரிடம் இருந்து 1.6 கிலோவும், ஜித்தாவில் இருந்து சவுதியா விமானத்தில் வந்த ஜெய்னுலாப்தீன், நவுபல், அப்துல்லா ஆகியோரிடம் இருந்து 3 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆசன வாயில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cochin airport , Cochin Airport, 6.2 kg, gold confiscated
× RELATED வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’...